இந்தோனேஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அந்நாடு அதிபர் ஜோகோ விடோடோவுடன் இணைந்து வானில் `பட்டம்விட்டு மகிழ்ந்தார். இவர்கள், பட்டம்விடும் வீடியோ காட்சி இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தோனேஷியாவுக்குச் சென்றார். இந்த சுற்றுப் பயணத்தின் போது, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். இந்தோனேஷியாவுக்குப் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும். அவரை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அங்கு சிவப்புகம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு, நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மோடி, இருநாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம்குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற `பட்டம்' கண் காட்சியில் அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இருவரும் வானில் பட்டம்விட்டு மகிழ்ந்தனர். மோடி பட்டம்விட்டு மகிழும் வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

 

Leave a Reply