கடந்த ஆண்டில் ஒன்றரைகோடி பேருக்கு புதிய இலவச எரி வாயு இணைப்பு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கோயமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, கோவை, திருச்சி உள்பட 50 நகரங்களை ரொக்கப்பணம் தேவைப்படாத டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உஜா வாலா யோஜனா திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் ஒன்றரைகோடி பேர் என ஐந்துகோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச எரி வாயு இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.