கர்நாடக மாநிலம், கலபுரகியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, அம்மாநிலத்தை ஆளும் மதச் சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.

கையாலாகாத கர்நாடக அரசும் முதல்மந்திரி குமாரசாமியும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை என்னும் ‘ரிமோட்’ மூலம் இயங்கிவருவதாக தெரிவித்தவர், விவசாயிகளுக்கு தனது தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு உதவிப் பணம் அளிக்கும் திட்டத்தில் இங்குள்ள மக்களை இணைக்காமல் உங்கள் முதல் மந்திரி குமாரசாமி விவசாயிகளுக்கு அநீதி இழைத்துவிட்டார்.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தடுப்புச் சுவரை எழுப்ப இந்த மாநில அரசு முயற்சித்தால் விவசாயிகள அந்தசுவரை இடித்து தரைமட்ட மாக்குவர்கள் எனவும் கூறினார்.
பயங்கரவாதம், ஏழ்மை மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கலப்படக் கூட்டணியை அமைத்துள்ளன.
மத்தியில் வலிமையான அரசு மீண்டும் அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ‘மெகாகூட்டணி’ என்று தங்களை கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் கலப்படக் கூட்டணியால் அப்படிப்பட்ட அரசை தரவேமுடியாது.
தற்போது நமது புதுவிதமான தீரத்தை உலக நாடுகள் அறிந்து கொண்டன. இந்ததீரம் மோடியின் தீரமல்ல, இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் தீரமாகும். இங்குள்ள 125 கோடி மக்களின் ஆசிபெற்ற நான், கொள்ளக்காரர்களுக்கோ, நேர்மையற்றவர் களுக்கோ, பாகிஸ்தானுக்கோ ஏன்? பயப்பட வேண்டும் எனவும் மோடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
கலபுரகியில் பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில் பலன் அடைந்தவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துபேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *