பிப்ரவரி 1-ம்தேதி முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொதுபட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார். மூத்த குடிமக்கள், மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர், மருத்துவர், செவிலியர், நோயாளிகள், விளையாட்டு மக்கள், அர்ஜுன்விருது பெற்றவர்கள் என 50 க்கும் மேற்பட்ட பிரிவுகள் டிக்கெட்டுகள் சலுகைகளை ரயில்வே வழங்குகிறது. இனி ரயில்சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயம்தேவை என்ற புதிய விதி பட்ஜெட்டின் போது அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில் சலுகைகளை கண்காணிக்கவே புதியவிதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2015-16-ம் ஆண்டில் மட்டும் 1,600 கோடி ரூபாய்க்கு டிக்கெட்சலுகைகளை ரயில்வே வழங்கியுள்ளது.

Leave a Reply