ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப் பட்டதால், மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகள், இன்னமும் 3 வாரங்களுக்கு பிறகு சீராகும் என்று மத்திய நிதிய மைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து டில்லியில் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால், உலகில் மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடான இந்தியாவை ரொக்க பரிவர்த்தனை இல்லாத நாடாக மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். மின்னணு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதால், அரசுக்கு வரிவருவாய் கிடைப்பதுடன், முறைகேடுகளும் தடுக்கப்படும்.


ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு துரிதகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக புதிய ரூபாய்நோட்டுகள் வைக்கப்பட்டு, இப்பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்கு துரிதகதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மக்கள் தற்போது சந்தித்துவரும் பிரச்னைகள் அனைத்தும் தாற்காலிகமானதுதான். இப்பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கு, மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும்பணியில் துரிதகதியில் ஈடுபட்டுள்ளது.ரிசர்வ் வங்கி நாள்தோறும் மிகப் பெரிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு அனுப்பிவருகிறது. அடுத்த 3 வாரத்துக்குள் குறிப்பிடத்தக்கதொகை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும். அதன்பிறகு, மக்களின் பிரச்னைகள் குறையத் தொடங்கும்.

Leave a Reply