கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 23-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தகூட்டத்தில் ஜனசங்கம் அமைப்பின் தலைவர் தீனதயாள் உபாத் யாயா நூற்றாண்டு விழாவும் இணைந்து கொண்டாடப்படுகிறது. மேலும் ஜன சங்கத்தின் ஆரம்ப கால மூத்த உறுப்பினர்களும் கவுரவிக்கப் படுகிறார்கள்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய செயலாளர் அமித் ஷா நேற்று விமானம் மூலம் கோழிக்கோடு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர்.

நேற்று காலை தேசியகுழு கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறுகருத்துக்கள் பற்றி விவாதங்கள் நடந்தது. இன்று  2-வது நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மாலை 3 மணிக்கு கோழிக்கோடு வருகிறார். மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி இந்த கூட்டத்தில் பேசுகிறார்.

Leave a Reply