ராணுவ தினத்தை யொட்டி, இந்திய ராணுவவீரர்களின் வீரம், ஈடு இணையில்லா சேவைக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, சுட்டுரையில் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


ராணுவ தினத்தில் ராணுவவீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்க ளின் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகள். இந்திய ராணுவ வீரர்களின் வீரம், ஈடு இணையில்லா சேவைகளுக்கு நாங்கள் மரியாதைசெலுத்துகிறோம்.
நாட்டின் இறை யாண்மையை காப்ப தானாலும் சரி அல்லது பேரிடர்காலத்தில் மக்களுக்கு உதவிசெய்வது என்றாலும் சரி, ராணுவமே எப்போதும் முதலாவதாக உள்ளது. இன்றையதினத்தில் நமது ராணுவத்தின் தியாகத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறோம். 125 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்வதற்காக, தங்களது வாழ்க்கையை அவர்கள் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்று சுட்டுரைபதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 1949-ஆம் ஆண்டில் ஜனவரிமாதம் 15ம் தேதியன்று தான், பிரிட்டனைச்சேர்ந்த ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சரிடம் இருந்து ராணுவத் தலைமைத்தளபதி பதவியை லெப்டினென்ட் ஜெனரல் கே.எம். கரியப்பா பெற்றுக்கொண்டார். இந்த தினம், ஆண்டுதோறும் ராணுவதினமாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply