இன்று 3ம்  கட்ட வாக்குப்பதிவில் கேரளா மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மறுவாக்கு பதிவு கேட்டுள்ளார் பாஜக கூட்டணி வேட்பாளர்.

கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இம்முறை சிறப்புக்கவனம் பெற்றதொகுதியாக மாறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் முதன்முதலாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தென்இந்தியாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதே . அவரை எதிர்த்து பாஜக சார்பில் கூட்டணிகட்சியான பாரத் தர்ம ஜன சேனா கட்சியின் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகிறார்.

இதையடுத்து 3 ஆவது கட்ட வாக்குப்பதிவை அடுத்து இன்று கேரளாவில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வயநாடு தொகுதிக்குட்பட்ட சிஎம் எஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரு முறை பட்டனை அழுத்தினாலும் வாக்கு பதிவாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாக்குப் பதிவில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனையடுத்து அத்தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவரான துஷார் வெள்ளப்பள்ளி தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் சம்மந்தப்பட்ட தொகுதிக்கு மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

Leave a Reply