கிறிஸ்துமஸ் தினமான இன்று (புதன் கிழமை) மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி.  ‘இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை ஊக்கப்படுத்தி வழி நடத்துகின்றன’ என்றார்.

‘ஏசு கிறிஸ்துவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவுகூர வேண்டியநாள் இது’ என்று அவர் கூறினார்.

‘கிறிஸ்துமஸ் தினவாழ்த்துகள்! இயேசு கிறிஸ்துவின் சேவை, இரக்கம் மற்றும் பல உன்னதங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவில் கொள்கிறோம். மனித துயரங்களைத் தீர்க்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவருடைய போதனைகள் உலகெங்கிலும் கோடி கணக்கானவர்களுக்கு ஊக்க மளிக்கின்றன’ என்று மோடி தமது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

 

Comments are closed.