இரட்டை இலைசின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கமுயன்ற வழக்கில் தினகரன் டில்லியில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு ரூ 50 கோடி லஞ்சம்கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில், தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று(ஏப்.,25) 4 வது நாளாக விசாரணை நடத்தினர் . சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணைநீடித்த நிலையில் நேற்று(25ம்தேதி) நள்ளிரவில் தினகரன் கைது செய்யப்பட்டார்.

சில நாட்களுக்குமுன்னர் டில்லியில் ரூ 1.30 கோடியுடன் சிக்கிய தரகர் சுகேஷ்சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன்மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லி கார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வுசெய்தனர்.
 

தினகரன், தரகர் சுகேஷ்சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா, ஜனார்த்தனன் ஆகிய நால்வரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரேவரியில் பதில் கூறுவதால் விசாரணை தொடர்ந்து 4வது நாளாக நீடித்தது.

 

4 நாட்களாக 37 மணிநேரம் நடந்த விசாரணை நள்ளிரவில் நிறைவடைந்து, முடிவில் தினகரன் கைது செய்யப் பட்டார். தினகரனின் நண்பர் மல்லிகார் ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply