நாட்டின் வடகிழக்குப் பிராந்தியங்களில் முக்கிய மாநிலமாக அஸ்ஸாம் விளங்குகிறது. இங்கு இல்லாத வளங்களே இல்லை என கூறும் அளவுக்கு நீர்வளமும், கனிமவளமும் செறிந்தமாநிலமாக அஸ்ஸாம் விளங்குகிறது.

இத்தனை வளங்கள் இருந்தும் அஸ்ஸாமும், அதன்மக்களும் வளர்ச்சியடையாமல் இருப்பது துரதிருஷ்ட வசமான. அஸ்ஸாமில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருக்கிறது. இது தவிர, இம்மாநிலத்தில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒருவர் (மன்மோகன் சிங்) 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்துள்ளார்.

 இத்தனை ஆட்சி அதிகாரங்கள் இருந்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒருசிறிய முயற்சியைக்கூட அவர்கள் எடுக்கவில்லையே? உங்களை (காங்கிரஸ்) நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் துரோகம் இழைத்து விட்டீர்கள். இனியும் அஸ்ஸாம் மக்களை ஏமாற்றலாம் என கனவுகாண வேண்டாம். அஸ்ஸாம் விழித்துக் கொண்டுவிட்டது.

 10 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு, 15 மாதங்களில் என்ன செய்துவிட்டீர்கள் என்று எங்களைப் பார்த்து காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலை மக்கள் மன்றத்திடமே நான் விட்டுவிடுகிறேன். இரண்டு ஆட்சிகளை மக்களே ஒப்பிட்டுப்பார்த்து பதில் கூறட்டும்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக "கிழக்கு நோக்கிய கொள்கை' என்ற திட்டமே முதலில் வகுக்கபட்டது.

 அதன்படி, அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ஏராளமான நிதியை மாநில அரசுகளுக்கு மத்தியஅரசு வழங்கியுள்ளது. அது தவிர, மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஏதேனும் ஒரு அமைச்சராவது மாதம் ஒருமுறையேனும் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று, மக்களிடம் குறைகேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அஸ்ஸாம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமென்றால், வளர்ச்சி மட்டுமே ஒரேதீர்வாக அமையும். அஸ்ஸாம் மக்களின் கனவையும், அதன் வளர்ச்சியையும் உறுதிப் படுத்துவதே எனது லட்சியம். அஸ்ஸாமில் பாஜக ஆட்சிக்குவந்தால் அஸ்ஸாம் ஒருமுன்னோடி மாநிலமாக மாற்றப்படுவது உறுதி.

இந்தியாவில் இரண்டாம் பசுமைப்புரட்சியைக் கொண்டு வருவதற்கான அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களுக்கே உள்ளன. அதிகப்படியான நீர் வளமும், வேளாண் நில வளமும் வடகிழக்கு மாநிலங்களில் தான் ஒருங்கே அமைந்துள்ளன.

 2022-ஆம் ஆண்டில் 75-ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடவுள்ளது. அப்போது, நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு வட கிழக்கு மாநிலங்கள் துணைபுரியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

 மாநிலத்தில் நலிவடைந்த சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிப்பதை பாஜக உறுதிசெய்யும். அந்த வகையில், கார்பி மற்றும் போடோ சமூகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துவழங்கப்படும்.

 இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. அதேபோல், மாநிலத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படும்.  இனி அஸ்ஸாமின் விடிவுகாலம் உங்கள் கையில்தான் உள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜார் மாவட்டத்தில் பாஜகவும், அதன் அஸ்ஸாம் மாநிலக் கூட்டணிக் கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணியும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த  தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நரேந்திர மோடி பேசியது:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.