சென்னைக்கு அருகே கடலில் இரண்டுகப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க குழு அமைக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவு குறித்து நேரில் ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், விபத்தில் சிக்கிய இருகப்பல்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. விசாரணை நடத்தப்படும்.

இந்த சம்பவம் குறித்து அரசியல்கட்சிகள் ஆதாரம் இல்லாமல் குறைகூறி வருகிறார்கள். எண்ணெய் படலத்தை அகற்ற எல்லா விதமான தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கரையில் ஒதுங்கிய எண்ணெய் படலத்தை அகற்ற கருவிகளைப் பயன் படுத்த முடியாத நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply