முதலில் மூன்று இந்திய வீரர்கள் இறந்தார்கள் என்ற செய்து கிடைத்தது.. ஆனால் நான் தமிழக ஊடகங்களை போல சீன மோகத்தில் அதை அவசரப்பட்டு எழுதவில்லை.. காரணம் எனது நாட்டு வீரனைப் பற்றி எனக்கு நன்றாகத்தெரியும்..

அவர்கள் உதை வாங்கிகொண்டு சாகும் பேடிக்கள் அல்ல..!!!! ஒரு இந்தியவீரன், ஒரு சீனனை கொல்லாமல் இறக்கவே மாட்டான் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

நான் எதிர்பார்த்தது போல் ஐந்து சீனவீரர்கள் இறந்தார்கள் என்ற செய்தி வந்த உடன்தான் என்பக்கத்தில் எழுதினேன்..

♦️அதே போல் 20 இந்தியர்கள் இறந்தனர் என்றசெய்தி முதலில் கிடைத்தது.. என் மனம் அதை ஏற்கவில்லை. சிறிது நேரத்தில் 43 சீன வீரர்கள் இறந்தனர் என்ற செய்தி கிடைத்த உடன் தான் இந்த மண்ணின் அடையாளமாக, வீரமாக நான்நம்புவது வீண் போகவில்லை என்று மனம் ஆறுதல் அடைந்தது..

ஒரு இந்தியன் இறந்தால் அங்கு நிச்சயம் 2 எதிரி இறந்திருப்பான் என்பதுதான்… 1948 ல் இருந்து நமக்கு நடந்த வரலாறு..

♦️என்ன தான் நடந்தது சீன எல்லையில்..

லெப்டினன்ட் ஜெனரல்கள் பேச்சு வார்த்தையை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அதாவது சோயுஸ் நதிக்கரையில் இருந்துவிலகுவதாக அறிவித்து.. விலகும் நாடகம் நடத்தியது சீனா ..

உண்மையிலேயே அவர்கள் விலகிவிட்டார்களா என திங்கட்கிழமை மாலை 55 பேர் கொண்ட இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துசென்றனர்.. ஆனால் குள்ள நரி சீனாக்காரன் பின்வாங்குவது போல் கூறி அங்கு 300 பேர்கொண்ட முகாம் அமைத்து இருந்தான்..

நம் இந்திய வீரர்களுக்கும் அந்த குள்ள நரிகளுக்கும் வாய்ச்சண்டை ஆரம்பித்தது.. அவர்கள் 300 பேர் இருக்கிறார்கள் என நம் 55 சிங்கங்கள் பயப்பட வில்லை. இருவரும் இரும்பு வயராலும் கம்பிகளாலும் தாக்க ஆரம்பித்தனர்.. சண்டை இரவுவரை நீடித்தது.. சண்டையில் பல இந்திய வீரர்கள் நதியில் விழுந்தனர்.. ஆக மொத்தத்தில் அந்த 300 பேரையும் இந்த 55 பேர் நையப்புடைத்து விட்டனர்.. நம் தரப்பில் தாயின் மானம்காக்க 40 சீனனைக் கொன்று 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்..

இறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி..

சீனாவை நாம் பழிவாங்க, வெற்றிகொள்ள செய்ய வேண்டியது எல்லாம் இரண்டே காரியம் தான் ..

ஒன்று சீன பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது..

இரண்டாவது இங்குள்ள கம்யூனிஸ்ட் தோழர்களை நேரில் பார்த்து பேசி புரிய வைத்து இணைப்பது.

Comments are closed.