இலவச சமையல் எரிவாயு இணைப்புபெறுவதற்கும் ஆதார் கட்டாயம் அளிக்கவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – இலவச சமையல் எரிவாயு இணைப்புபெற விரும்புவோர், தற்போது ஆதார் எண் இல்லை யென்றாலும், வரும் மே மாதம் 31-ம் தேதிக்குள் அந்த எண்ணை தெரிவிக்கவேண்டும்.

இது தவிர, ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்த ஒப்புகை சீட்டின் நகலை இணைத்தும் இலவச சமையல் எரிவாயு இணைப்புபெற விண்ணப்பிக்கலாம். இதுபோன்ற விண்ணப்பங்களில் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாளஅட்டை ஒன்றையும் பயனாளிகள் இணைக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply