நாட்டில் உள்ள ஏழைபெண்களுக்கு இலவச சமையல் எரிவாயுவழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்கு ‘பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, இத்திட்டத்துக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (www.pmujjwalayojana.com) முகவரியை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருவதற்கான படிவங்களை இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதோடு, இத்திட்டம் குறித்த தகவல்களையும் பெறலாம். கூடுதல் தகவல்களை 1800-266-6696 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு அறியலாம். இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply