இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் உள்ளது என மத்திய மனிதவள இணை அமைச்சர் ராஜிவ்பிரதாப் ரூடி தெரிவித்தார்.

 காஞ்சிபுரம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள ஷிவிங் ஸ்டெட்டர் நிறுவனத்தில் தனியார் பங்களிப்பு மூலம் திறன்மேம்பாட்டு பயிற்சி நிலையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

 இளைஞர்களின் திறனை மேம்படுத் துவதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு கவனமாக உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் தொழில்பயிற்சிகளை பெற வேண்டும். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் இருப்பது பாராட்ட த்தக்கது. சென்னையிலுள்ள நோக்கியா ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோயுள்ளது. இதற்கு மாநில அரசே பொறுப்பு ஏற்கவேண்டும்.

 ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 10,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைப்பதை குறிக்கோளாக கொண்டு மத்திய அரசு செயற்பட்டுவருகிறது.

 இதற்குத் தேவையான உபகரணங்களையும், மனிதசக்தியும் இந்தியாவிற்குள்ளேயே விருத்திசெய்து கொள்ள வேண்டும். இந்தியாவில் அரசு நிறுவனங்களை விட தொழில் முனைவோர்களே அதிகளவு வேலைவாய்ப்புகளை வழங்குகிறார்கள். தொழில் முனைவோர்களை அரசு ஊக்கப்படுத் தினால்தான் நாடு அபிவிருத்தி அடையும்.

 எல்லாத்துறைகளிலும் திறன்மிகு இளைஞர்களைக் கட்டி எழுப்பவேண்டும்.  பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களில் தொழில் முனைவோருக்கான கல்விகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கல்வியின் மூலம் தொழில் சொல்லி கொடுக்கவேண்டும். திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவதன் மூலமாகவே பிரதமர் மோடியின் "இந்தியாவில் தயாரிப்போம்' கோஷத்தை உண்மையாக்கலாம் என்றார்.

Tags:

Leave a Reply