இந்தியாவில் மாநிலங்களவையின் செயல்திறன் வெறும் 8 சதவீதம்தான். இது குறித்து இளைஞர்கள் எதிர்க் கட்சியினரிடம் கேள்வி எழுப்பவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று டில்லியில் கூறினார்

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மக்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருக்கின்ற காரணத்தினால் அதன் அலுவல்திறன் 85 சதவீதமாக உள்ளது . மாநிலங்களவையின் அலுவல்திறன் 8 சதவீதம் மட்டும்தான். மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு தேவையான அளவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. அங்கு எதிர்க் கட்சிகள்தான் முன்னிலை வகிக்கின்றன. அதனால் அங்கு அலுவல்திறன் மிகவும் குறைவு. பதினாறாவது மக்களவை 250 மசோதாக்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது. அதற்குகாரணம் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவையில் பெரும்பான்மை பலம் கிடைத்ததுதான்.

மாநிலங்களவையின் அலுவல்திறன் மிகவும் குறைவாக இருப்பது குறித்து எதிர்க் கட்சியினரை பார்த்து இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டால் அது தேசியளவில் எதிர்க் கட்சியினர் மீது ஒரு நிர்ப்பந்தமாக அமையும். அதன் காரணமாக மாநிலங்கள் அவையின் அலுவல்திறன் உயரவாய்ப்பு ஏற்படும். பிரதமர் நரேந்திர மோடி பேசிய பிறகு வினா விடை பகுதி இந்த நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.

அப்பொழுது இளைஞர்கள் எழுப்பிய கேள்விக்கு ஊழல் ஒழிப்பு ஏழைகளுக்கும் ஆட்சி அதிகாரத்திற்கு வாய்ப்பு, 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து விரிவாக மோடி பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *