இளைஞர்கள் சமூகத்துக்கு தேவையான, மக்களுக்கு பயன் படும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும்,'' என, மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பபுவியியல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார்.


காரைக்குடி சிக்ரியை பார்வை யிட்டு, விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நிறுவன அதிபர்களுடன் கலந்துரையாடிய அவர் கூறியதாவது: சிக்ரிவிஞ்ஞானி மதியரசன் குழுவினர் கண்டுபிடித்துள்ள மண்பரிசோதனை கருவி மூலம் விவசாயிகள் மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், அமிலகாரத்தன்மை, மின்கடத்தி ஆகியவற்றை உடனே தெரிந்து கொள்ளலாம்.

இந்த கருவிக்கான காப்புரிமை பெற்றபின், மத்திய வேளாண்துறையால் பயன் படுத்த பரிந்துரைக்கப்படும். தற்போது மண் பரிசோதனை செய்யும்கருவி விலை ரூ.14 ஆயிரம் . இதன் விலையோ ரூ.300. இதன் மூலம் ஐந்து நிமிடத்தில் மண்ணின் தரத்தை அறிந்து அதற்கேற்ப பயிர்களைபயிரிடலாம்.


மாணவர்கள் நுாறு பேப்பர் எழுதியிருக்கிறேன் என கூறாமல், ஒருஆராய்ச்சி செய்தாலும், அது தொழில்துறை மற்றும் விவசாயத்துக்கு பயன் படும்படியாக இருக்க வேண்டும். பிரச்னையை தீர்க்ககூடிய ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.


இளைஞர்கள் ஆராய்ச்சி கனவுகாண வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ைஹட்ரோ கார்பன் எடுப்பது குறித்து கருத்தும்சொல்ல விரும்பவில்லை. தற்போதைய அறிவியல் ஆராய்ச்சி முன்னேற்றத்தால் நாள் ஒன்றுக்கு 24 கி.மீ.,ரோடு போடமுடிகிறது, என்றார்.


தொடர்ந்து சிக்ரியில் நிறுவப்பட்டுள்ள 3 டி பிரிண்டரை திறந்துவைத்து மரக்கன்று நட்டார். உடன் இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை, விஞ்ஞானிகள் மீனாட்சி சுந்தரம், வேலாயுதம் இருந்தனர்.

Leave a Reply