கேரளா மாநிலம் இறைவன்தேசம் என்று கூறுவார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவே இறைவன் தேசம் என்று சொல்லலாம். மற்ற மதங்களுக்கு, தோற்றுவித்தவர், தோன்றியவர்கள் இருக்கும் காலத்தில், இந்துமதம் என்பதற்கும் இந்தியா என்பதற்கும் தோன்றிய நாளோ, தோற்றுவித்தவர் இல்லை.

தேவைகள் ஏற்படும்போது இறைவனே இங்கு வந்து தோன்றுவார். மகாபாரதம் ஒருலட்சம் ஸ்லோகங்கள் கொண்டது. வேத வியாசர் இதை சொல்லசொல்ல அதே வேகத்தில் எழுதுவற்கு ஆள் வேணடும். பிள்ளையாரே இறங்கி வந்து தன் தந்தத்தை உடைத்து மகாபாரதம் எழுதினர்.

ராமன், கிருஷ்ணர், புத்தர், மகாவீரர், ராமானுஜர் என்று இறைவனின் அவதாரம் தொடங்கி மகான்கள், ஞானிகள் என்று இந்த நாட்டில் ஒவ்வொரு கால கட்டத்திலும் தோன்றியவர்கள் அனைவருமே இந்த தேசத்தின் மகன்களாகதான் பார்க்கிறோம்.

ஜகன் மாதா, லோகநாயகி, ஆதிசக்தி என்று உலகின் முதல்கடவுள் பெண்ணாக காண்பது தான் இந்தியர்களின் பாரம்பரியம். அந்த ஆதிசக்திக்கு அனைவரும் மகன்கள்தான்.

இந்த பாரம்பரியம் இன்று வரை தொடர்கிறது. இங்கு 5 வயது பெண்குழந்தையை கூட தாயே என்று அழைக்கும் வழக்கம்தான் உள்ளது.

சுந்திர போராட்டத்தில் கூட கட்ட பொம்மன் தொடங்கி, திலகர், கோகலே, காந்தி, சாவர்க்கர், பாரதியார், பட்டேல், வ.உ.சி என்று லட்சக் கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து நாட்டை முன்னேற்றபாதையில் கொண்டுசென்றனர். இவர்கள் அனைவரையும் இந்த நாட்டின் மகன்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

இதனால்தான் காந்தியை தேசத்தந்தை என்று மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் கூறுவதை பலர் ஏற்பதில்லை. இதேநிலைதான் இப்போது மோடி விவகாரத்திலும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மோடியும், டிரம்பும் இணைந்து பத்திரிக்கை யாளர்களை சந்தித்தனர். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர் கேட்கிறார். அதற்கு பதில்அளித்த டிரம் காஷ்மீர் விவகாரம், தீவிரவாதத் தாக்குதல் குறித்து மோடியே பார்த்து கொள்வார். அவர் இந்தியாவின் ஒருதந்தையாக திகழ்கிறார் என்று பாராட்டி உள்ளார்.

இது அவரின் பார்வையாக இருக்கலாம். கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவின் பெருமையை அடக்கிவைத்த, அதை வெளிப்படுத்த தெரியாத தலைவர்கள் மத்தியில் மோடி அந்தநிலையை தலைகீழாக மாற்றி உள்ளார். உள்நாட்டில்கூட ஜிஎஸ்டி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, 8 கோடி கழிவறைகள் கட்டியது போன்ற பல சாதனைகள் செய்ததாக இருக்கலாம்.

இதைவிட பாம்பு, பல்லி தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று நினைத்த வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மனதில் பெருமிதம் ஏற்படுத்தியவர் மோடி.

என்றாலும் கூட இந்த தேசத்தில் பிறந்த அனைவருமே பாரததாயின் புதல்வர்களே. அவர்களுக்குள், திலகர், சுபாஷ் சந்திர போஸ், பாரதியார், படேல், காந்தி உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்கள் தவப்புதல்வர்களாக பார்க்கப்படுகின்றன.

அப்படிப்பட்டோர் வரிசையில், நரேந்திர மோடியும் இணைந்துள்ளார். உலகின் குருவாக இந்தியாவை மாற்றும் முயற்சியில் மோடி தீவிரமான ஈடுபட்டிருக்கலாம். அவர் கடந்த கால, எதிர்கால பிரதமர்களில் சிறந்தவர் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் உள்ளூர் பிரச்னைகளில் சிக்கிதவிக்கும் வேளையில், மோடி சர்வதேச தலைவராக உருவாவது தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயம். இதுவரை, இந்தியா உட்பட உலக நாடுகளின் பிரதமர்கள் யார் என்பதை அமெரிக்காதான் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துவந்தது. தற்போது அந்த நிலை மாறி, அமெரிக்க ஜனாதிபதியாக இவர் தான் வர வேண்டும் என்ற முடிவை இந்தியபிரதமர் எடுக்கும் நிலை வந்துள்ளது. இந்தியாவின் இந்தநிலைக்கு, பிரதமர் மோடியின் பங்கு அளப்பரியது.

இதையெல்லாம் மனதில்வைத்து தான் இந்தியாவின் தந்தை மோடி என்றார். ஆனால் இங்கு உள்ளவர்களோ நாட்டில் ஏற்படும்மாற்றத்தை உணராமல் மோடியை விமர்சனம் செய்கிறார்கள்.

அடிமை இந்தியாவில்கூட முதல் முதலில் சுதந்திரம் குறித்து பேசத் தொடங்கியவனை  உறவுகள், ஊர் என அனைவரும் எதிர்த்தன. அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் அவன் தன் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திய காரணத்தால் தான் வெள்ளையன் நாட்டைவிட்டு வெளியேறினான்.

அதே போலதான் போற்றுவார் போற்றலும் துாற்றுவார் துாற்றலும் போகட்டும் கண்ணனுக்குகே என்பதற்கு இணையாக மோடியின் பணி நடக்கிறது. அதை மற்றவர்கள் புரிந்துகொண்டு விட்டார்கள். இந்தியர்கள் புரிந்து கொள்வது தான் முக்கியம்.

Comments are closed.