குஜராத் மாநிலத்தில், 2004ல் நடந்த என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட இஸ்ரத்ஜகான், லஸ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் தற்கொலை படையை சேர்ந்தவர் என, பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் கோலமன் ஹெட்லி, தன் சாட்சியத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த தொடர்தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி ஹெட்லி, 55, அமெரிக்காவில் இதேவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த வழக்கில் அப்ரூவரான ஹெட்லி, அமெரிக்காவில் இருந்து, 'வீடியோ கான்பர ன்சிங்' மூலமாக, மும்பை கோர்ட்டில் சாட்சியம் அளித்துவருகிறான்.

கடந்த சில தினங்களாக அளித்த சாட்சியத்தின் போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ., மற்றும் லஸ்கர் – இ – தொய்பா ஆகியவைதொடர்பாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தான்.


இந்நிலையில் நேற்றும், வீடியோ மூலம் சாட்சியம் அளித்தான் ஹெட்லி. அப்போது, குஜராத்தில், 2004ல் போலீஸ் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட, இளம்பெண் இஸ்ரத் ஜகான், 19, லஸ்கர் – இ – தொய்பா அமைப்பின் தற்கொலை படையை சேர்ந்தவர் , குஜராத்தில், தற்கொலைப் படையைச் சேர்ந்த இஸ்ரத் ஜகான் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக பயங்கரவாதி லக்வி கூறினார்,'' என்றான்.

 பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ., மற்றும் லஸ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பு, எனக்கு அவ்வப்போது பணம்அனுப்பின, பாபர் மசூதி இடிப்புக்கு பழி வாங்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள அக்சர்தாம் கோவிலில் தாக்குதல்நடத்தவும், லஸ்கர் – இ – தொய்பா திட்டமிட்டது என்றான்


கடந்த, 2004, ஜூன் 15ல், குஜராத்மாநிலம் ஆமதாபாத் நகருக்கு அருகில், இஸ்ரத் ஜகான், ஜாவத் ஷேக் என்கிற பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி அக்பரலி ரானா, ஜீஷான் ஜோகர் ஆகிய நான்குபேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இவர்கள், லஸ்கர் -இ – தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை கொல்ல வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 'இஸ்ரத், மும்பையில் உள்ள ஒருகல்லுாரியில் படிக்கும் மாணவி. போலீசார், போலி என்கவுன்டரில், இஸ்ரத்தை சுட்டு கொலை செய்துவிட்டனர்' என, காங்கிரஸ் போய் குற்றச்சாட்டுகளை கூறிவந்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply