உலகத்திலேயே இந்தியாவிற்கு அடுத்து எனக்கு பிடித்த தேசம் இஸ்ரேல்  தான் .ஏனெனில் ஒரு நாடு பிறந்த மறுநாளே ஆறு நாடுகளுடன் சண்டைக்கு நின்றது என்றால் உலகிலேயே இஸ்ரேல் மட்டும்தான்.இன்றைக்கும் தன்னை சுற்றி இருக்கிற அரபு நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி கொண்டி ருக்கும் நாடான இஸ்ரேல் தனக்கு பக்கத்தில் உள்ள அரபு நாடு எதுவா கினும் இஸ்ரேலை தாக்க திட்டம் போடும் முன்பே தன்னுடைய உளவுதுறையான மொசாத் மூலம் அறிந்து திட்ட மிட்ட நாட்டை தாக்கி முடித்திருப்பார்கள்.

அந்தளவிற்கு வேகமான செயல்பாடு கொண்ட நாடு உலகிலே யே இஸ்ரேல்தான்.இன்றைக்கும் உலகில் நிறைய சாதனை யாளர்கள் யூதர்கள் தான்.இந்த யூதர்கள் தான் இன்று உலகள வில் பரவியி ருக்கும் கிறிஸ்துவ இஸ்லாம் மதங்களுக்கு ஆதி மூலம்.இந்த யூதர்களை பற்றி ஒரு சிறு விஷயம்…

யூதர்களின் புனித நூலான தோராதான் கிறிஸ்துவர்களின் பைபிளுக்கும் இஸ்லாமியர்களின் குரானுக்கும் ஆனிவேராகும். முஸ்லிம்களை போலவே யூதர்களும் சுன்னத் செய்வார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் ஆபிரகாம் என்பவரின் முதல் மனைவியான சாராவுக்கும் இரண்டாவது மனைவியான வேலைக்காரிஆகாருக்கும் இருந்த சக்களத்தி சண்டைதான் அடுத்து சாராவின் பையனான ஈஸாக்குக்கும் ஆகாரின் பையனான இஸ்மாயிலுக்கும் இடையே பங்காளி சண்டை யாக மாறி தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இன்று யூதம் இஸ்லாம் என்ற இரண்டு மதங்களுக்கு இடையே உள்ள சண்டையாக உருமாறி விட்டது.

தன்னுடைய சொந்த பூமியான கானான் பிரதேச த்தில் இருந்து ரோமானியர்களாலும்அரேபியர்களாலும் துரத்தபட்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்த யூதர்கள் ஆயிரகணக்கான ஆண்டுகள் கழித்து அடைந்த தேசம் தான் இஸ்ரேல்.சரி விஷயத்துக்கு வா என்கிறீர்களா..வருகிறேன்.

நம் நாட்டு வீரர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு சொந்தக் காரர்கள் இந்த இஸ்ரேல்நாடுதான். இந்த இஸ்ரேலிய நாட்டில் உள்ள நிறுவனமான IWI- இஸ்ரேல் வெப்பன் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் ராணுவத்திற்கு சிறியதும் பெரியதுமான துப்பாக்கிகளை அளிக்கின்றது.

இந்தியாவில் உள்ள உலகின் டாப்-10 லிஸ்டில் உள்ள மார்கோ ஸ் என்றுஅழைக்கப்படும் மெரைன் கமாண்டோ ஃபோர்ஸ் பயன் படுத்தும் TAR-21சிறிய தானியங்கி துப்பாக்கியான Uzi-22 மற்றும் தொலை தூரம் வரை குறிவைத்து தாக்கும் GALIL போன்ற துப்பாக்கிகள் அனைத்தும் இஸ்ரேலிய தயாரிப்பு தான்..

இதுவரைஇஸ்ரேலில் இருந்து துப்பாக்கியை இறக்குமதி செய்த நாம் இனி மேக் இன் இந்தியா திட்டத்தின்.மூலம் இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய இருக்கிறோம்.இதற்கு தாங்க மோடி
நாடு நாடா சுற்றினார்.
.
இதற்காக இஸ்ரேல் ஆயுத தொழிற்சாலை, இந்தியாவின் தனியார் நிறுவனமான அரியானா மாநிலத்தில் குர்கானில் உள்ள புஞ்ச் லாயிட் என்ஜீனிரிங் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் படி 51% பங்குகள் புஞ்ச் லாயிட் நிறுவனத் தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.முதல் கட்டமாக துப்பாக்கிகளு க்கு தேவையான சிறிய உபகரணங்களை செய்து இஸ்ரேல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யு உள்ளார்கள். அடுத்து படிப்படியாக அனைத்தும் இந்தியாவில் உருவாக்கி மேட் இன் இந்தியா என்ற முத்திரை யுடன் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யுமாம்..

இது தான் சூப்பர் மோடி மேஜிக்.
.
டார்-21 உஷி பிஸ்டல்.கலில்போன்ற சிறந்த துப்பாக்கிகளை தயாரிப்பதன் மூலம், அதன் தொழில் நுட்பத்தை அடிப்படை யாக வைத்து வரும் காலங்களில் இதை விட சிறந்த துப்பாக்கி களை இந்தியாவிலே யே தயாரித்து உலக சந்தைகளில் இஸ்ரேல் மாதிரி இந்தியாவும் விற்பனை செய்ய முடியும்.

நன்றி ; விஜெயகுமார் அருணகிரி

 

One response to “இஸ்ரேலாகும் இந்தியா-”

  1. RP sathish says:

    கட்டுரை அருமையாக இருந்தது.

Leave a Reply