உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்தியஅரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டம் தொடர்பான புகைப்பட காட்சியை இன்று சென்னை நந்தனத்தில் மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கிவைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசியது: ” இந்த புகைப்பட காட்சியில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அறியப்படாத பல வீரர்கள் இதன்மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரியகட்சியாக உருவெடுத்துள்ளது.

உக்ரைனில் கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களை இந்தியா அழைத்துவருவது என்பது சாதரண விஷயமல்ல, அதுவொரு சவால் மிக்க பணி. ஏனென்றால், அங்கு போர்நடந்து கொண்டிருக்கிறது.

அந்தபோர்ப் பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றிக் கொண்டுவருவது என்ற சவாலான பணியை நமது பாரத பிரதமர், நரேந்திரமோடி ஏற்றுள்ளார். அவரது தலைமையில் இந்தியர்களின் பாதுகாப்புதொடர்பான கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தை தொடர்ந்து, நம் இந்திய மாணவர்களை மீட்கும் பணியானது துரிதமாக நடைபெற்று கொண்டுள்ளது”. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Comments are closed.