எடியூரப்பா 57-மணிநேர முதல்வர் என கிண்டல் பதிவுகள்

உங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…

ஆம்..காவிரி பிரச்சனை தொடங்கி 102- வருடம் ஆகிறது…

ஆம்… இந்த 57-மணிநேரத்துக்காக தான்
மோடி காத்திருந்தார்…

இந்த ஒரு நாள் முதல்வர் பதவிக்கு தானே ஆசைப்பட்டார் மோடி…

என்ன புரியவில்லையா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்றால் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மவுனம் காக்க வேண்டும்…

காங்கிரசும் …மதசாஎ்பற்ற ஜனதாதளமும் ஆட்சி அமைக்கும் களேபரத்தில் இருந்ததை பயன்படுத்தி முதல்வர் நாற்காலி மீது அவர்கள் கவனத்தை சிதற வைத்து உச்சநீதிமன்றத்தில் வலுவான காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கனகச்சிதமாக முடித்து விட்டார்…

இனி வரும் ம.ஜ.த+காங்கிரஸ் அரசு காவிரியை தடுத்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அதிகாரத்தை விட.. கர்நாடக மாநில அதிகாரத்தை விட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றத்தால்
அதிகஅதிகாரம் அளித்து விட்டார்…

இப்போது கங்கிரஸ்- மஜக கூட்டணிக்கு ''கர்நாடகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது'' என உச்சநீதிமன்றத்தை உடனடியாக குறைகூற முடியாத நிலமை..
ஏனென்றால் உச்சநீதிமன்றம் 24-மணிநேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என உத்தரவிட்டதாலே மஜத காங்கிரஸ் கூட்டணிக்கு நாற்காலி கிடைத்தது..

ஒரு புறம் தமிழகத்திற்கு காவிரி நீர்…மறுபுறம் கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பை சமாளிக்க அவர்களுக்கு 57-ஆயிரம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி…

ஒரு நாள் முதல்வர் …
ஒரு மவுனம்..ஒரு கையெழுத்து…

தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்க
உச்சநீதி மன்றத்தில் மவுனம்…
கர்நாடக விவசாயிகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக 57 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி….

தன் நாட்டில் உள்ள மக்களின் மதம் சாதி மொழி எதுவும் அறியாமல் அந்த மக்களின் தேவைகள் மட்டும் அறிபனே தலைவன்…

நியாயத்தை நிறைவேற்றுபவனே தலைவன்…

ஒரே தேசம்…ஒரே தலைவன் …மோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *