பசிப்பிணியால் வாடிய உயிர்களை கண்டு பசிக்குடில் அமைத்த வள்ளலார் வாழ்ந்த வடலூர் மண்ணில், பாரம்பரியம் மாறாமல்,  150 வருடங்களாக சித்த மருத்துவத்தால் நோய்களை நீக்கி, இன்று 6வது தலைமுறையாக சித்த மருத்துவ சேவை செய்யும் மருத்துவர் வச்சலா தேவியை, விஜயபாரதத்திற்காக சந்தித்து நேர்காணல் கண்டார் மன்னை மாதவன்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

என் கணவர் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனில் வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். எட்டு வயதிலிருந்தே என் தந்தையுடன் மருந்து தயாரிப்பதில் ஈடுபடுவேன். 150  வருடங்களாக என் முன்னோர்கள் சித்த மருத்துவர்கள். எங்கள் குடும்ப பாரம்பர்யத்தை பற்றி என் தாய் அதிகம் என்னுடன் பேசுவார். நானும் 6வது தலைமுறையாக சித்த மருத்துவர் ஆனதற்கு என் தாய்தான் காரணம்.

சித்த மருத்துவத்திற்கும் மற்ற மருத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்?

சுக்கில் இருக்கு சூட்சமம், மிளகில் இருக்கு மோட்சம் என்ற சித்தர்களின் இந்த வார்த்தைக்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது. உதாரணமாக சளி, இருமல், ஜுரம் என்றால் நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியிலேயே நமக்கு மருத்துவம் இருக்கிறது.

1 வெற்றிலை, 6 மிளகு, 2 கல்லு உப்பு இவற்றை மென்று உமிழ்நீரை விழுங்கினால் ஜுரம், சளி, மயக்கம் சரியாகிவிடும். எட்டு விதமான குறிகள் மூலம் மனிதர்களின் நோயை துல்லியமாக சொல்லும் மருத்துவம் இதுவே. விஞ்ஞானம் வளர்ந்த இக் காலத்திலும் பல ஆயிரம் வருடம் முன்பே வளர்ந்த இந்த பாரம்பரியம் சித்த மருத்துவத்தின் பெருமை.

எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் இதன் அர்த்தம் என்ன?

உச்சி குளிர்ந்தால் உயிர் குளிரும், உச்சி வாடினால் உயிர் வாடும் நம்முடைய தலை (சிரசு), கண்கள், காதுகள், மூக்கு, வாய் மிக முக்கியமான உறுப்புகள் இவைகளை நன்றாக பராமரிக்க வேண்டும். வாரம் இரண்டுமுறை, சித்தர்கள் கூறியுள்ள நாட்களில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் உடல் உஷ்ணம் அடையாமல், கண் நோய்கள் நீங்கி உடல் சீராக இயங்கும். உடலில் பல நோய்கள் தோன்றுவதற்கு உடல் உஷ்ணமே முதல் காரணம். மேலும், நாள் 2, வாரம் 2, மாதம் 2, வருஷம் 2 இதை கடைப்பிடித்தாலே நோய்கள் அணுகாது.

கண்ணுக்கு கலிக்கம், வயிற்றுக்கு வமனம், நாசிக்கு நசியம் கொண்டு இந்த உடலை பராமரிக்க வேண்டும்.

கண் நோய்கள் வருவதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன?

எண்ணெய்க் குளியல் வறட்சியை போக்கும். கண் நோய்கள் வராது. ரசாயன கலவையில் செய்த ஷாம்பு நம் தலையை வறட்சியடையச் செய்யும். அதனால் கண் நோய் வரும். செல்போன், கம்யூட்டர், டீ.வி முன்பு அதிகம் நேரம் செலவிடுவதாலும் கண் நோய்கள் வரும். அஸ்வகந்தா பலாட்சாதி தைலம் தேய்த்து குளித்தால், 4,448 வியாதிகளையும் கண்டிக்கும். எங்கள் சொந்த தயாரிப்பில் உள்ள நேத்திர பூண்டு மருந்து பயன்படுத்தினால் – 96 வகை கண் நோய்கள் நீங்கும்.

இந்நாளில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பல் நோய்கள் வருகிறதே?

பல் நோய்களுக்கு மூல காரணம் நம் பாரம்பர்யத்தை நாம் மறந்தது தான். அந்நாளில் நம் முன்னோர்கள் வேலங்குச்சி, ஆலங்குச்சியை கொண்டு பல் துலக்கினார்கள். இந்த குச்சிகளிலிருந்து வரும் சாறு கசப்பு, துவர்ப்பு சுவை உடையது. இதுகள் வயிற்றில் சேரும்போது கிருமிகள் கொல்லப்படும். குடல் வியாதிகள் வராது. அதேபோல் பல் வியாதிகளும் வராது. குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் இவைகளை அறவே  தவிர்க்க வேண்டும். பற்பசை இல்லாமல் மூலிகை பல்பொடிகள் கொண்டு (ஆதணூண்ட) கைகளால் முதலில் பெரியோர்கள் பல் விளக்க வேண்டும். அப்பொழுது தான் குழந்தைகள் நம்மை பார்த்து கைகளால் பல் சுத்தம் செய்வார்கள். கண்டங்கத்திரி வேர், நாயுருவி வேர் கொண்டு பல் விளக்கினால் பல் வியாதிகள் வராது. பலவித மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட நான்கு விதமான பல்பொடிகள் எங்களிடம் உள்ளன.

நாயுருவி, வசம்பு மூலிகைகளோடு சில பொருட்கள் சேர்த்து மருதாணி பதத்தில் அரைத்து நம் பற்களில் காப்பு போட்டுகொண்டால், நம் பற்களில் உள்ள கிருமிகள் நம் கால்கள் வழியாக வெளியேறுவதை நாமே காணலாம். இப்படி செய்தால் வாழ் நாள் முழுவதும் வாயில் பற்களில் கிருமிகளே சேராது.

இன்று பலருக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு வருகிறது. இதை தவிர்க்க என்ன வழி?

இன்றைய நவீன வாழ்க்கை முறையும் இதற்கு காரணம். உடல் உழைப்பு இல்லாமை, முன் உண்ட உணவு செரிமானம் இல்லாமை புரோட்டா, பிட்சா, பர்கர், புகை, மது பழங்கள், குறிப்பாக, சமையல் எண்ணெய்கள், மலச்சிக்கல், உடலை விட்டு வெளியேறாத வாயு, இவைகள் கூட மாரடைப்பு வருவதற்கு காரணம்.

நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் உள்ள பூண்டு, கட்டிப்பெருங்காயம் மாரடைப்பை தவிர்க்கும். அஷ்டசூரணம், மருதம் பட்டை சூரணம் அருமருந்து. வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட்டாலும் மாரடைப்பு வராது. இரவு நேரத்தில் தேனில் ஊற வைத்து பூண்டை சாப்பிட்டால் மாரடைப்பு தவிர்க்கப்படும்.

வயிறு சம்பந்தமான நோய்கள் தவிர்க்க வழி என்ன?

சித்த மருத்துவத்தில் பசு வெண்ணெயை கைவல்ய நவநீதம் என்று கூறுகிறோம். சுத்தமான பசு வெண்ணெய் எல்லா நோய்களையும் போக்கும், இது குடலுக்கு நல்லது. காலை வெறும் வயிற்றில் வெண்ணெய் சாப்பிட்டால் குடல் நோய்கள் வர வாய்ப்பு இல்லை. கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சமையல் மிகவும் நல்லது. வருஷம் இரண்டு முறை மருந்து சாப்பிட்டு, வயிற்றை சுத்தம் செய்தல் அவசியம். எனிமா முறையிலும் வயிற்றை சுத்தம் செய்தல் நலம். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை பொரியலாக அல்லது சூப்பாக சாப்பிட்டால் நல்லது.

தேங்காயின் மருத்துவ குணம் என்ன?

திருடும் பழக்கம் உள்ள ஒருவருக்கு காலை உணவாக வெறும் வயிற்றில் தேங்காயை தொடர்ச்சியாக சாப்பிட கொடுத்தல் அவர் மனம் திருந்தி நல்வழியில் செல்வார். இது தேங்காயின் ஒரு மருத்துவ குணம். தாய்ப்பாலுக்கு நிகரானது தேங்காய் பால், பச்சைத் தேங்காய் சாதாரணமாக சாப்பிடலாம். நெய், எண்ணெய் தேங்காயுடன் சேரும்போதும் தேங்காயை வேக வைப்பதாலும் கொழுப்பாக (இடணிடூஞுண்ணாணூச்டூ) மாறும். தேங்காயை மட்டுமே உணவாக கொண்டு வாழ்ந்த யோகிகள் நம் மண்ணில் வாழ்ந்தனர். தேங்காய் எண்ணெய் சமையல் மிகவும் நல்லது.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எதனால் வருகிறது? இதற்கு தீர்வு உண்டா?

குறிப்பாக (ஆணூணிடிடூஞுணூ) கோழி கறி சாப்பிடுகிறவர்களுக்கு இந்த புற்றுநோய் வர அதிகம் வாய்ப்பு உண்டு. அதிக உதிர போக்கு, மாதவிடாய் சிக்கல்கள் உள்ளவர்களுக்கு வரலாம். இவை எல்லாம் உடல் உஷ்ணத்தினால் வரும் நோய்கள். வாரம் இருமுறை எண்ணெய் குளியல் சிறந்தது. காய்கறிகளில் ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளால் இந்த நோய் வரும். சில பெண்களுக்கு கர்பப்பையில் பிரச்சினை இருந்தாலும், மார்பக புற்றுநோய் வரும். அந்நாளில் பெண்கள் பூப்பெய்தும் பொழுது உளுந்தங்களிபுட்டு, அரிசிபுட்டு, நல்லெண்ணையுடன் சேர்த்து உணவாக கொடுப்பார்கள். இந்த உணவுகள் ரத்தத்தில் சத்துகளை சேர்க்கும். சமன் செய்யும் பெண்களுக்கு உடல், உழைப்பு இல்லாததும் ஒரு காரணம். நம் பாரம்பரிய முறைகளை மறந்ததே மார்பக புற்றுநோய்க்கு காரணம். முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, உரம் போடாத அரை கீரைகளைச் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்று நோயைத் தடுக்கலாம்.

இப்போது பல பெண்கள் கர்பப்பையில் கட்டி ஏற்பட்டு கர்பப்பையை இழக்கும் நிலை ஏற்படுகிறதே?

நல்ல கேள்வி. இறைவனால் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதமே கர்பப்பை. இதை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை. பொதுவாக கர்பப்பையில் கட்டிகள் வராது. அப்படியே வந்தாலும் அவை நீர் கட்டிகளே. சித்த மருந்துகளால் இந்த நீர் கட்டிகளை 7 நாட்களில் கரைத்து விடலாம். கர்பப்பையில் கிலோ கணக்கில் இருக்கும் கட்டிகளை கூட வெறும் களிமண் வேப்பிலை கொண்டு நீக்கிவிடலாம். அறுவை சிகிச்சை இல்லாமலே இன்று இருக்கும் இந்த நோய்க்கு அன்றே தீர்வு கண்டவர்கள் நம் சித்தர்கள், நம் பாரம்பர்ய மருத்துவத்தின் மகிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

நடுத்தர வயதினர் முதல் வயதானவர் வரை கைகால் மூட்டு வலி பிரச்சனை உள்ளதே இதற்கு தீர்வு உண்டா?

நிச்சயமாக உண்டு. டிணணீதணா, ணிதணாணீதணா சரியாக இருந்தால் அதாவது மலச்சிக்கல், வாயு தொல்லைகள் இல்லாமல் இருந்தால் மூட்டு வலி வராது. வயது முதிர்தவர்களுக்கு சத்து குறைபாடுகளால் மூட்டுகளில் வலி ஏற்படும். முருங்கைக்கீரை சூப், முடகத்தான் தோசை (நல்லெண்ணெய்) வாதநாராயண கீரை, கூட்டு உரம் இல்லாமல் வளரும் உத்தமமான உத்தாமணி கீரை, பெரண்டை துவையல், முடக்கத்தான் லேகியம், அமுக்கார சூரணம், நவபாஷ மூட்டு வலி தைலம், பிண்ட தைலம் நல்ல தீர்வு தரும்.

சர்க்கரை நோய் இன்று இளம் வயதினருக்கும் வருகிறதே? இது பரம்பரை நோயா?

சர்க்கரை (ஈஐஅஆஅகூஉகு) இது நோயே அல்ல! இது ஒரு குறைபாடு (ஈஉஊஉஇஐஉ‡இஙு). பொதுவாக உணவை பசித்தபின் தான் உட்கொள்ள வேண்டும். மேலும், மேலும் திணிக்கும் பொழுது நொறுக்குத் தீனிகள் அதிகம் உட்கொள்ளும் பொழுது கல்லீரல் மண்ணீரல் பாதிப்பினால் ­ஐ‡குக்ஃஐ‡ சுரக்காமல் இந்த குறைபாடு வருகிறது. இதற்குதான் வாழ்க்கைமுறை, காரணம் நாகப்பழக்கொட்டை மாம்பருப்பு ஆவாரம் பூ, சிறு கட்டு பொடி, பெண் முகட்டை சூரணம். தென்னம்பாளைபொடி போன்ற சிறந்த இயற்கை மருந்துகள் கூட உள்ளன. இது குறைபாடு. பரம்பரை நோய் அல்ல.

ரத்த புற்றுநோய் தொடங்கி பல புற்று நோய்கள் புற்றீசல் போல் வருகிறதே இதற்கு தீர்வு உண்டா?

ஆச்சர்யம் என்னவென்றால், நம் உணவில் ஆறு சுவை இருந்தாலே புற்று நோய் வராது கசப்பு, துவர்ப்பு சுவைகளை இன்று நாம் தவிர்த்து விட்டோம். காலையில் – இஞ்சி, கடும் பகல் – சுக்கு, மாலையில் – கடுக்காய் உட்கொண்டாலே புற்று நோய் வராது. ரத்தத்தில் தாமிர சத்து (ஞிணிணீணீஞுணூ) குறைபாடுகள் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வரும். துவர்ப்பு சத்து ரத்தத்தில் சேர்ந்தால் புற்று நோய் வராது. நல்லெண்ணெய் கொப்பளிப்பு மிகவும் நல்லது. வேறு சில சமையல் எண்ணெய்களும் புற்று நோய் வர முக்கிய காரணம். கரிசலைகர்கம் தாமிர கட்டு செந்தூரம், ரஜகந்தி மெழுகு கேப்சூல் ஆகியவை புற்றுநோயை நீக்கும் மருந்துகள். நோயின் தன்மை பரிசோதித்த பிறகே மருந்துகள் கொடுக்கப்படும்.

உடல் பருமன் ணிஞஞுண்டிணாதூ தவிர்க்க என்ன வழி?

உழைப்பின்மை, நொறுவை போன்ற காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. மலச்சிக்கல், ரத்தத்தில் சிவப்பணு  குறைவு, குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய உணவுகள் சாப்பிடுவது இவற்றால், உடல் பருமன் ஏற்படுகிறது. அளவான உணவு, நடை பயிற்சி நல்லது – நவககுக்குலு மாத்திரைகள் உட்கொண்டு கொள்ளு, பார்லி, கேழ்வரகு, கம்பு, நான்கையும் வறுத்து சத்து மாவு கஞ்சி சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

Tags:

Leave a Reply