காவிரி  நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குவிசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு இன்று முதல் 6 நாட்களுக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறந்துவிட உத்தரவிட்டது. 

இந்த உத்தரவுகுறித்து விவாதிக்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டினார். 

இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்கிற அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் முடிவு குறித்து சிறப்பு அமைச்சரவையை கூட்டி கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா விவாதித்தார். 

அதில், தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தில், சீராய்வு மனுதாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். 

Leave a Reply