காவிரிவிவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமை யாவை பிரதமர் நரேந்திர‌மோடி சந்திக்க மறுத்துவிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்துக்கு காவிரிநீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்துள்ளது. எனவே இந்தப்பிரச்சினையில் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு சித்தராமையா கடந்தவாரம் கடிதம் எழுதி இருந்தார்.ஆனால் இதற்கு மோடி பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா கூறும்போது, “காவிரி பிரச்சினை யில் பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக தீர்த்துவைக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமரை புதன் கிழமை சந்திக்க இருக்கிறேன்” என பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால் பிரதமரை சந்திக்க சித்தராமையா நேற்று டெல்லிக்குசெல்லவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் சித்தராமையாவிடம் கேட்டப்போது, “என்னை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கி இருப்பதாக முதலில் தகவல்வந்தது. பிறகு நேரம் ஒதுக்கவில்லை என அவரது அலுவலகத்தில் தெரிவித்தார்கள். எனவே நேரம்ஒதுக்கினால் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்” என்றார்.

இதற்கு முன்னதாகவே கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறும்போது, “காவிரி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட மாட்டார். சித்தராமையா பிரதமரை சந்திப்பதே கடினம்” என ஊடகங்களில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக தீர்த்துவைக்க வேண்டும் என்றால் உடனடியாக தண்ணீரை நிறுத்த உதவுங்கள் என்றே அர்த்தம் எனவேதான் மோடி விரட்டுகிறார் முதலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை  மதி என்று.

Leave a Reply