உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வு பெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப்பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணிமூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்ற பட்டு வருகிறது.

இதன்படி உச்சநீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார்  தீபக் மிஸ்ரா.

இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் அக்டோபர் 3-ம் தேதி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்.உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply