சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உட்தாபஞ்சாப் படம், பஞ்சாபில் கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். 

உட்தா பஞ்சாப் திரைப்படத்தில் அதீதமான வன் முறை மற்றும் போதைப் பழக்கம் தொடர்பான காட்சிகள் உள்ளதாக கூறி படத்தில் வரும் 89 காட்சிகளை நீக்கும்படி தணிக்கைகுழு பரிந்துரை செய்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இப்படம் குறித்து தனதுகருத்தை சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

இப்படத்தை பாலாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான சமீராநாயர் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சுவாமி, அவர் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். சமீராநாயரும், இணை தயாரிப்பாளரான அனுராக் காஷ் யப்பும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பணம் பெற்றுக் கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பஞ்சாபில் கலவரத்தை ஏற்படுத்தி, எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதே இப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் எனக் கூறியுள்ள சுப்ரமணியன் சுவாமி, படத்தை தேர்தலுக்குபிறகுதான் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply