உணவகங்களில் உங்களுக்கு அளிக்கப்படும் சேவை திருப்திகரமாக இல்லையெனில் நீங்கள் சேவைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. திருப்தி இல்லாத சேவைக்காக சேவைக்கட்டணம் செலுத்த மறுக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறை அளித்துள்ள விவரம் வருமாறு:

சேவைக் கட்டணம்தொடர்பாக மத்திய அரசு அளித்த விளக்கத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது. பொதுவாக உணவகங்களில் சாப்பிடும் உணவுக்கு, அங்குவழங்கப்படும் சேவைக்கென சேவைக் கட்டணத்தையும் சேர்த்து பில்லாக அளிக்கப்படும். சேவைக் கட்டணமானது 5 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை உள்ளது. இது தவிர டிப்ஸ் எனப்படும் சப்ளையருக்கு அளிக்கப்படும் தொகை இதில் இடம் பெறாது.

சேவைக் கட்டணத்தை கட்டாயமாக நுகர்வோரிடமிருந்து வசூலிப்பது முறையற்றவர்த்தக நடவடிக்கையாகும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சேவைக் கட்டணம் என்பது, வாடிக்கையாளருக்கு அளிக்கப் படும் சேவை திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் வசூலிக்கப்பட  வேண்டியதாகும். இதை அளிப்பது குறித்து நுகர்வோர் தீர்மானிக்கலாம் என்று இந்திய ஹோட்டல் சங்கமும் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இத்தகைய அறிவிப்பை மத்திய நுகர்வோர்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு களுக்கும், திருப்தி இல்லாத சேவையை பெறும்வாடிக்கையாளருக்கு சேவை வரியை அளிக்காமலிருக்கும் உரிமை உண்டு என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply