உணவு பதப்படுத்தும் துறையில் 100 சதவீத அந்நியநேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான செயல்பாட்டு விதி முறைகளை விரைவில் மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


உணவு பதப்படுத்தும் தொழிலில் அந்நியநேரடி முதலீட்டை கொண்டு வருவதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும்பொருட்களுக்கு நல்ல விலையை வழங்க முடியும். மேலும் உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் தடுக்கமுடியும். தற்போது இந்தியாவில் அதிக உணவுபொருட்கள் வீணாகின்றன. சேமிக்கும் வசதிகள் இல்லாததுதான் இதற்கு மிக முக்கியகாரணம். குறிப்பிட்ட காலத்திற்குள் கொள்முதல் செய்ய முடியாததாலும் உணவுகள் கெட்டுப் போகின்றன.

வேளாண்மை பொருட்களுக்கு மதிப்புகூட்டி உருவாக்குவதில் நிறைய பேர் முதலீடுசெய்ய ஆவலாக இருக்கின்றனர். அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டால் அவர்கள்வந்து நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்வார்கள். நல்லவிலையை விவசாயிகளுக்கு வழங்குவார்கள். மேலும் பொருட்கள் வீணாகாமல் தடுத்து பொருட்களுக்கு மதிப்பைகூட்டுவார்கள். உணவு பதப்படுத்துவதில் அந்நிய நேரடி முதலீடு குறித்த விரிவான விதி முறைகளை மத்திய அரசு விரைவில் கொண்டுவர இருக்கிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply