உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்துவருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதுமுதல், மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்திவருகிறார்.

இந்த நிலையில் மேலும், ஒருஅதிரடி நடவடிக்கையாக மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களின் ஓய்வுவயதை 65-ல் இருந்து 70 ஆக உயர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த சுகாதாரத் துறை மந்திரி சித்தார்த்தநாத் சிங், “மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் ஒருபகுதிதான் மருத்துவர்களின் ஓய்வு வயதை 70 ஆக உயர்த்தும் இந்தமுடிவு” என கூறியுள்ளார்.

இதுபற்றி மேலும் கருத்துகூற மறுத்து விட்டவர், “விரைவில் நடக்க உள்ள மந்திரி சபை கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்” என கூறினார். 

Leave a Reply