உத்தரபிரதேச சட்ட சபை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் பணிகளில் பாஜக., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி தொகுதியில் தேர்தல்பிரசாரம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக அப்போது அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் பிரசாரத்தை தொடர முடியவில்லை.

சோனியாவின் பிரசாரம் மீண்டும் நடக்கா விட்டாலும், காங்கிரசுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் பிரசாரத்தை விறுவிறுப்பாக்க பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார். குறிப்பாக சோனியாவின் செல்ல தொகுதிகளாகக் கருதப்படும் அமேதி, ரேபரேலி ஆகிய இருதொகுதிகளிலும் பதிலடி பிரசாரத்துக்கு பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது.

இதற்காக அமேதி, ரேபரேலிதொகுதிகளின் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் சமீபத்தில் டெல்லி மேலிடத்துக்கு அழைத்து ஆலோசிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பிரதமர் அடுத்த மாதம் (செப்டம்பர்) உத்தரபிரதேசம் செல்கிறார். அமேதிதொகுதியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவைக்கிறார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மற்ற மாநிலங்கள விட உத்தரபிரதேசத்தில் தான் அதிக பொதுக்கூட்டங்களில் மோடி கலந்துகொண்டு பேசினார். அதுபோல உத்தரபிரதேச சட்ட சபை தேர்தலிலும் அதிக கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளார்.

Tags:

Leave a Reply