மகாராஷ்டிர பாஜக தலைவராக அந்த மாநில அமைச்சர் சந்திர காந்த் பாட்டீலும், உத்தரப்பிரதேச பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங்கும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் இந்த ஆண்டு இறுதியில்  மாநில சட்ட பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்தமாநில பாஜக.,வுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது, அதேசமூகத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல் அந்த பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துவைத்ததில்  முக்கியப்பங்கு வகித்தார். இதற்கு முன்பு மத்திய அமைச்சரான தன்வே பாட்டீல் மகாராஷ்டிர பாஜக தலைவராக இருந்துவந்தார்.

மும்பை நகர பாஜகவுக்கு புதிய தலைவராக மங்கள் பிரபாத் லோதா நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியை மாநில அமைச்சர் ஆசிஷ்ஷேலர் வகித்து வந்தார்.

உத்தரப் பிரதேச பாஜக தலைவராக இருந்துவந்த மகேந்திரநாத் பாண்டே மத்திய அமைச்சராகப் பதவியேற்றதால், பாஜக விதிமுறைகள்படி மாநில கட்சித் தலைவர் பதவிக்கு புதிய தலைவர் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சுதந்திர தேவ்சிங் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:

Comments are closed.