மதுராகலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோ ஹாவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுதொடர்பாக கூறியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிய வில்லை. இதுபோன்ற கலவரங்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன. மதுரா கலவரத்தில் உண்மையாக நிகழ்ந்தது என்ன? என்பதை அறிந்து கொள்ள உத்தரப் பிரதேச அரசு விரும்பினால், சிபிஐ விசாரணைக்கு உத்தர விடுமாறு மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க வேண்டும். ஆனால் அங்குநடந்ததை மறைப்பதற்கான முயற்சிகள் நடப்பது போலவே தெரிகிறது என்றார்.

Leave a Reply