உத்தராகண்டில் பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல்பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

உத்தராகண்ட் சட்டப்பேர வைக்கு வரும் பிப்ரவரி 15-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல்கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல்பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, மனோகர் பாரிக்கர் உட்பட 40 நட்சத்திர பிரச்சாரகர்கள் பங்கேற்பார்கள் என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மதுரா மக்களவை தொகுதி எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ரவி சங்கர் பிரசாத், ராதாமோகன் சிங், பாஜக தேசியசெயலாளர் அருண் சிங், மாநில முன்னாள் முதல்வர்கள் பி.சி.கந்தூரி, பகத்சிங் கோஷியாரி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங் மற்றும் விஜயபகுகுணா உள் ளிட்டோரும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

முதல்வர் வேட்புமனு தாக்கல்

உத்தராகண்ட் மாநிலத்தின் கிச்சாதொகுதியில் போட்டியிட முதல்வர் ஹரிஷ்ராவத் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2 தொகுதிகளில் போட்டியிட ஹரிஷ்ராவத் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் உதம்சிங் நகர் மாவட் டத்தில் உள்ள கிச்சாதொகுதியில், உதவி தேர்தல் அதிகாரி நரேஷ் துர்காபாலிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இம்முறை ஹரித்வார் ஊரக தொகுதியிலும் போட்டியிட ஹரிஷ்ராவத் முடிவு செய்துள் ளார். ஆனால் இத்தொகுதியில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Leave a Reply