உத்தர பிரதேசத்தில் முதல் கட்டதேர்தல் நடந்த 73 தொகுதிகளில் 50 இடங்களை பா.ஜ.க கைப்பற்றும் என்று அமித் ஷா கூறினார்.

403 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 50 இடங்கள் பா.ஜ.க.,வுக்கு கிடைக்கும் என்று தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார். இதுபற்றி அவர் அளித்த பேட்டிவருமாறு:-

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி . முதல் கட்டமாக 73 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 50 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும்.

நாளை மறுநாள் 67 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடக்கிறது. இந்தபகுதிகளும் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்த இடங்களும் பா.ஜ.க.,வுக்கு செல்வாக்கு மிக்கவைதான். இந்த இருகட்டதேர்தலிலும் மொத்தம் 90 தொகுதிகள் பா.ஜ.க.,வுக்கு கிடைக்கும்.

காங்கிரஸ், சமாஜ்வாடிகட்சி கூட்டணி எந்த விதத்திலும் பொருந்தாத ஒன்று. அதுபுனிதமான கூட்டணி அல்ல. சமாஜ்வாடி கட்சியில் தலைமைமாறினாலும் அதன்போக்கு மாறவில்லை. காங்கிரசுடன் சேர்ந்தால் சமாஜ்வாடி கட்சிக்கு 100 தொகுதிகள்வரை இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply