கரோனா வைரஸ் பரவாமல்தடுப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தாக்கரே கூறிய பரிந்துரையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது எப்படி, டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் தப்லீக்ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப் படுத்தி கண்காணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்கள், மருந்துப்பொருட்கள் கையிருப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலையில் அதன்பிறகு நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உத்தவ்தாக்கரே பேசுகையில் ‘‘ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள மதத்தலைவர்களுடன் பேச வேண்டும். மதத் தலைவர்கள் தங்கள் சமூகமக்களிடம் சமூக விலக்கலை மக்கள் சரியாக முறையில் பின்பற்றுமாறு அறிவுரை வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்ள வேண்டும், அதுபோலவே மதக் கூட்டங்களை தவிர்க்கவேண்டும் என கேட்டுக் கொள்ள வேண்டும்’’ என பரிந்துரைத்தார்.

பிரதமர் மோடி உடனடியாக இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். இதுபோலேவே ஊடரங்கு காரணமாக வீட்டுக்குள் இருக்கும் மக்கள் உடல்நலம் மட்டுமின்றி மனநலத்துடன் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தவ்தாக்கரே பரிந்துரைத்தார். இதையும் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.

Tags:

Comments are closed.