சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடை பெறும் உத்திரப் பிரதேசத்தில் இந்துக்கள் பழிவாங்கப் படுவதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. உத்திரப்பிரதச மாநிலம் அலகாபாத்தில் பாரதிய ஜனதாவின் தேசியசெயற்குழு கூட்டம் நடக்கிறது. அதற்கு முன்னோடியாக நடந்த கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் சட்டம் – ஓழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், இஸ்லாமியர்கள் பெருவாரியாக உள்ள இடங்கயில் இருந்து இந்துக்கள் பயத்துடன் இடம் மாறி செல்வதாகவும் அவர் கூறினார்.

கைரானா என்ற பகுதியிலிருந்து 356 இந்துகுடும்பங்கள் இவ்வாறு வெளியேறிவிட்டதாக குறிப்பிட்டார். அமித் ஷாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக மத்திய அமைச்சர் கல்ராஜ்மிஸ்ரா அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும்பேசிய அவர் உ.பி-யில் இந்துக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாகவும், மாநிலஅரசு மக்களை பாதுகாக்க தவறி விட்டதாகவும் புகார் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து பாஜக மதவாத அரசியலை கையில் எடுத்து ள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றியை தக்கவைக்கும் அளவில் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பிரச்சார உத்தியை வகுக்குமாறு கட்சித்தலைவர்களை மோடி வலியுறுத்தியுள்ளார்.  

Tags:

Leave a Reply