உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்தவெற்றி மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதை காட்டுகிறது என பாஜக ராஜ்ய சபா எம்.பி இல. கணேசன் கூறியுள்ளார்.

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்துமாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட உத்தர பிரதேசத்தில் மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஜக தலைவர்கள் உற்சாககருத்தினை பதிவிட்டு வருகின்றனர். பாஜக ராஜ்ய சபா எம்.பி இல. கணேசன் ஐந்துமாநில தேர்தல் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், மோடியின் கறுப்புபண ஒழிப்பு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

உபி என்றாலே உற்சாகம் பிறக்கிறது என்பது தான் பொருள். உத்தர பிரதேசத்தில் கிடைத்தவெற்றி இனி நாடு முழுவதும் எதிரொலிக்கும். தமிழகத்திலும் மக்கள்மனதில் பாஜகவை ஆதரித்தால் என்ன என்ற எண்ணம் பிறந்துள்ளது என்றும் கூறினார்.
 
தமிழகத்தில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம். இதுநாள் வரை எங்களைப் புறக்கணித் தவர்கள் கூட இனி பாஜகவை ஆதரிக்க தயாராகிவிட்டனர். தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் பாஜகவைப் பற்றி குற்றம் சாட்டுகின்றனர். இது நாங்கள் வளர்ந்து கொண்டிருப்பதை காட்டுகிறது. எங்கள் மீது பொறாமைகொண்டுதான் இவ்வாறு பேசி வருகிறார்கள் என்றும் இல கணேசன் கூறினார்.

Leave a Reply