உபியில் பிஜேபி மட்டும் 311 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.இதன் கூட்டணி கட்சியான அப்னாதளம் 9 தொகுதிகளிலும் இன்னொரு கூட்டணி கட்சியான சுகல் தேவ் பாரதிய சமாஜ் கட்சி.4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.ஆக பிஜேபி கூட்டணி உபியில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 324 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

 

இது உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் எந்த கட்சியும் செய்யாதது.1980 சட்டமன்ற தேர்தலில் காங்கி ரஸ் உருவாக்கி வைத்திருந்த 309 தொகுதிகளில் வெற்றி என்கிற ரெக்கார்டை பிஜேபி உடைத்துள்ளது.காங்கிரஸ்

உருவாக்கிய சாதனை வெற்றி உத்தரகாண்ட் மாநிலம் உருவாகாமல் ஒன்றுபட்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 425 தொகுதிகள் இருந்த பொழுது நடந்தது.

 

ஆனால் பிஜேபி 403 தொகுதிகளில் 324 தொகுதிகளை பிடித்துள்ளது.ஆக இது தான் சாதனை வெற்றி.

Leave a Reply