டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை ஏதும் நடக்க வில்லை என்றும், இச்சோதனைக்கு ஜெக்ரிவால் அரசியல்சாயம் பூச முயற்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் தனது அலுவலத்தில் சிபிஐ சோதனை நடந்ததாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது., அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் என்னுடைய அறையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடிய வில்லை என்பதால் இதுபோன்ற கோழைத்தனமான முடிவை மோடி இப்போது எடுத்துள்ளார் என கூறி இருந்தார்.

இந்நிலையில் இதற்கு அளித்துள்ள சிபிஐ., முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறையில் சோதனை  நடத்த வில்லை , முதல்வரின் முதன்மைசெயலாளர் ராஜேந்திர குமார் அறையிலேயே சோதனை என விளக்கம் அளித்துள்ளது.  

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்தார். நாடாளுமன்ற மேல் சபையில் விவாதத்தின் போது அவர் இது தொடர்பாக கூறியதாவது., கெஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை எதையும் நடத்தவில்லை. உயர் அதிகாரிகள் ஒருவர் ஊழல் வழக்கில் தொடர்புபட்டுள்ளதால் அவரது அலுவலகத்தில் மட்டுமே சோதனை நடந் துள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply