உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பின் தாக்கம் எப்படி என்பது குறித்து தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு

ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை ஒழித்து, அவற்றை திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8–ந் தேதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறித்த மக்களின் மனநிலையை அறிய தந்தி டி.வி. விரும்பியது.

இது தொடர்பாக சென்னை, வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய 12 நகரங்களில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நகரத்திலும் தலா 500 பேர் வீதம் மொத்தம் 6 ஆயிரம் பேரிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. முடிவுகள் வருமாறு:–

கருப்பு பணத்தை ஒழிக்குமா?

* உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவு எப்படிப்பட்டது?

துணிச்சலான முடிவு– 85 சதவீதம்

ஓட்டு வங்கி அரசியல் முடிவு– 11 சதவீதம்

கருத்து இல்லை – 4 சதவீதம்

* உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு, கருப்பு பண ஒழிப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஓரளவு கருப்பு பணத்தை ஒழிக்கும்– 47 சதவீதம்

கருப்பு பணத்தை முழுமையாக ஒழிக்கும்– 32 சதவீதம்

கருப்பு பணத்தை ஒழிக்காது – 15 சதவீதம்

கருத்து இல்லை – 6 சதவீதம்

செயல்படுத்திய விதம்

* மக்களுக்கு எத்தகைய அசவுகரியத்தை ஏற்படுத்தி உள்ளது?

குறுகிய கால அசவுகரியம் – 60 சதவீதம்

தேவையற்ற அசவுகரியம் – 34 சதவீதம்

கருத்து இல்லை – 6 சதவீதம்

* செயல்படுத்திய விதம் எப்படி?

சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தி இருக்க வேண்டும் – 87 சதவீதம்

தவிர்க்க முடியாத அசவுகரியங்கள்தான் – 11 சதவீதம்

கருத்து இல்லை – 2 சதவீதம்

எதிர்க்கட்சிகளின் போராட்டம்

* ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமா?

நியாயப்படுத்த முடியாது; அரசியல் நாடகம் – 62 சதவீதம்

நியாயப்படுத்தலாம். பொறுப்புள்ள செயல் – 26 சதவீதம்

கருத்து இல்லை – 12 சதவீதம்

* ரூபாய் நோட்டு ஒழிப்பில் அரசின் முடிவை ஆதரிக்கிறீர்களா?

ஆதரவு – 61 சதவீதம்

எதிர்ப்பு– 34 சதவீதம்

கருத்து இல்லை – 5 சதவீதம்

ரொக்க பணமில்லா பொருளாதாரம்

* ரூபாய் நோட்டு ஒழிப்பு எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்ததா?

அனைவருக்கும் அதிர்ச்சி – 46 சதவீதம்

குறிப்பிட்ட தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது– 45 சதவீதம்

கருத்து இல்லை – 9 சதவீதம்

* ரொக்க பணமில்லா டிஜிட்டல் பொருளாதாரம் சாத்தியமா?

சாத்தியம் – 61 சதவீதம்

சாத்தியம் இல்லை – 36 சதவீதம்

கருத்து இல்லை – 3 சதவீதம்

* ரொக்கமில்லா பொருளாதாரத்தை ஆதரிக்கிறீர்களா?

ஆம் – 50 சதவீதம்

இல்லை– 48 சதவீதம்

கருத்து இல்லை – 2 சதவீதம்

* அதிகம் பாதிப்புக்குள்ளாவது யார்?

கருப்பு பணமில்லா சாமானிய மக்கள் – 50 சதவீதம்

கருப்பு பண முதலைகள் – 45 சதவீதம்

கருத்து இல்லை – 5 சதவீதம்.

இவ்வாறு தந்தி டி.வி. கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Leave a Reply