உரியநேரத்தில் காவிரி மேலாண்ம வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா தெரிவித்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழக பாரதிய ஜனதா சார்பில் அமித்ஷாவை சந்தித்து காவிரிபிரச்சனை குறித்து பேசியதாகவும், விவசாயிகளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதிய ளித்ததாகவும் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை உரியநேரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததாக பொன்.ராதா கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ஜெயலலிதாவை, பிரதமர் மோடி வந்துபார்ப்பாரா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே ஒப்புக் கொண்ட பணிகள் ஏராளமாக பிரதமருக்கு உள்ளதால் அவர் ஜெயலலிதாவை வந்து பார்க்கும் வாய்ப்பு இல்லை என்றார். தமிழகத்தில் இடைக் கால முதலமைச்சர் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். 

Leave a Reply