மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்றவர்களே பாஜக அரசு மீண்டும் வரவேண்டும் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், கண்ணூஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசினார். அப்போது தங்களுக்காக பாஜகவினர் யாரும் வாக்கு சேகரிக்கவில்லை என்றார்.

மாறாக மத்தியஅரசின் திட்டங்களால் பயன்பெற்றவர்களே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என வாக்குசேரிக்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

மேலும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியிடம் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான எந்ததிட்டமும் இல்லை என்றும், அவர்களுடைய தேர்தல் அறிக்கையில்கூட தீவிரவாத ஒழிப்பு பற்றி குறிப்பிடவில்லை என்றும் மோடி குற்றம்சாட்டினார்.

மற்றவர்களை போல உருளைக் கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய் வாக்குறுதி அளிக்கமாட்டோம் எனத் தெரிவித்த பிரதமர், விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply