70 ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மாகாந்தி தேசத்தின் தந்தை என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். 72 ஆண்டுகளாகவே, எந்த ஆதாரமும் இல்லாமல் காந்தி பழைய தேசத்தின் தந்தை என்றுகருதினோம். இப்போது அதை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள். அது உங்கள் விருப்பம்.

இந்தியாவுக்கு ஒரு புதியதந்தை உருவாகியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மோடிதான் புதிய இந்தியாவின் தந்தை என்று கூறினார். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் யாருடன் போராடு வீர்கள்? சிலநேரங்களில் வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் உருவாகும் போது, 350 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய சுற்று பகுதி பிராந்தியம் ஏன் ஒருவலுவான அமைப்பாக உருவாக முடியாது? இந்திய பெருங்கடலுடன் தொடர்புடைய நாடுகளுக்கிடையிலான உறவு பண்டைய காலங்களிலிருந்தே உள்ளது. இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள அனைத்துபகுதிகளும் இந்தியா என்று அழைக்கப்பட்டன, இப்போது மீண்டும் அவை அனைத்தும்சேர்ந்து, இந்தியா என்று அழைக்கப்படும் நேரம் வந்துவிட்டது.

இது புதிய இந்தியா, வன்முறை, படுகொலை, மதபாகுபாடு, பெண்களைச் சுரண்டல் இல்லாமல் விடுதலையின் பாதையைக் காண்பிப்பது, ஆகியவை நடைபெறும் இந்தியா இது. உலகமே ஒரேகுடும்பம் என நம்பும் இந்தியா இது. 8 கோடி பெண்கள் முத்தலாக் விவாகரத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டதை போல, பலகோடி முஸ்லிம்களை அழிவிலிருந்து காப்பாற்றப்போகும் இந்தியா இது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி நாட்டை ஒன்றிணைத்துள்ளோம். எனவேதான், நவீன இந்தியாவின் தந்தை என பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுகிறார்.

இந்திரேஷ்குமார்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் 

Comments are closed.