Brutus ஜுலியஸ் சீசரின் ரோமானிய சாம்ராஜ்ய, அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, சீசரின் நெருங்கிய உறவினர் ப்ரூட்டஸ் செய்த துரோகம், வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது.

* அகில சக்திகளையும் ஒருங்கே கொண்டிருந்த சீசரை, ப்ரூட்ஸ் அவரது மனைவி தடுத்தும் கேட் காமல் கொன்றார்.

* வாங் ஜிங் வேய், 1921ம் ஆண்டு பிறந்த சீனரான இவர், நெருக்கடியான நேரத்தில், தன் தாய் நாட்டுக்கு எதிராக ஜப்பானியர்களோடு அணிசேர்ந்ததற்காக இவரும் மிகப் பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார்.

* ரோசன்பர்க் தம்பதியர் அமெரிக்கா மற்றும் சோவியத் நாட்டுக்கிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில், அணு மற்றும் பல்வேறு அமெரிக்கரகசியங்களை சோவியத் நாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப் பட்டனர். பிறகு இவர்கள் இருவரின் உளவுவேலைகள் கண்டு பிடிக்கப் பட்டு 1953ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப் பட்டனர்.

* பெனடிக்ட் அர்நால்ட், 16ம் நூற்றாண்டில் அமெரிக்க தளபதியன இவர் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் நடந்தபோரில், அமெரிக்க ராணுவதளபதியாக இருந்தும் அமெரிக்க கோட்டையை, பிரிட்டனுக்கு விட்டுக் கொடுத்து அமெரிக்காவுக்கு துரோகம் இழைக்க முயற்சிசெய்தார். பின்னர் கடல் வழியே தப்பி கனடா நாட்டில் 1801ல் இறந்தார். ராணுவவீரராக இருந்து தாய் நாட்டுக்கு இழைத்த துரோகத்துக்காக இவர் வரலாற்றில் இடம் பெறுகிறார்.

* ஆல்ட்ரிக் ஏம்ஸ் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ வில் முக்கியபொறுப்பில் இருந்த இவர், 1985ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் உள்ள சோவியத்தூதரகத்தில் நுழைந்து, அமெரிக்க ரகசியங்களை 4.6 மில்லியன் டாலர் பணத்துக்காக விற்றார். இவர் விற்றரகசியங்களால் ஏறக்குறைய 100 அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு வந்தன. அமெரிக்கா சந்தித்த மிகப் பெரிய உளவுதோல்வி இது. இதை நடத்தி வைத்ததற்காக ஏம்ஸ் வரலாற்றில் இடம் பெறுகிறார்.

* விட்குன் க்விஸ்லிங்: நார்வே நாட்டைச் சேர்ந்த இவர், 1933ம் ஆண்டு தேசிய ஒற்றுமை கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கி, ஹிட்லரின் விசுவாசியாக இருந்து ஹிட்லர் படையெடுத்து வரும் முன்பே, நார்வேநாட்டின் ராணுவயுத்திகள் அத்தனையும், ஹிட்லருக்கு தெரிவித்தார். இதனால் படையெடுப்பு நடக்கையில் எளிதாக நார்வேயை வென்ற நாஜிக்கள், வென்றதும், க்விஸ்லிங்கை நார்வே நாட்டின் அதிபராக நியமித்தனர். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும், 1945ம் ஆண்டு, இவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. நார்வே நாட்டை காட்டிக் கொடுத்ததற்காகவும், நார்வே நாட்டு மக்களால் மிகவும் வெறுக்கப் பட்டதற்காகவும், இவர் மிகப்பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார்.

* ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாஸ் 30 வெள்ளிக் காசுகளுக்காக ஏசுவை காட்டிக் கொடுத்தார். அதிகாரிகள் வருகையில் “நான் ஏசுவை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறேன் அதை வைத்து ஏசுவை கைது செய்து கொள்ளுங்கள்“ என்று கூறி காட்டிக் கொடுத்ததால், ஏசு கைது செய்யப் பட்டு சிலுவையில் அறையப் படுகிறார். இதனால், வரலாற்றின் புகழ் பெற்ற “துரோகி“ ஆகிறார்.

இவர்களையெல்லாம் விட மிகப் பெரிய துரோகி யாராவது உண்டா ? உண்டு நண்பர்களே. உண்டு.

அந்தத் துரோகிதான் “கருணாநிதி“.

* காவிரியில் தமிழனுக்கு செய்த துரோகம் ….

* கச்சத்தீவில் செய்த பச்சை துரோகம் இன்றய மீனவர்கள் அவதிக்கு மூல காரணம் … துரோகத்தின் ஆணிவேர் …

* 1980 ல் எதிர்க்கட்சிகளுக்கு துரோகம் செய்துவிட்டு இந்திராவை மீண்டும் தலையெடுக்க வைத்தது …..

* மணல்கொள்ளையை தமிழகத்தில் அறிமுகம் செய்துவைத்து நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு செல்ல வைத்தது …..

* தமிழின தலைவர் என்று கூறிக்கொண்டு, இலங்கையில் அப்பாவி ஆண், பெண், குழந்தைகளை உயிர் காத்துக்கொள்ள பதுங்கு குழிகளில் ஒதுங்கி இருந்தபோதும் இந்திய உதவியுடன் இலங்கை ராணுவம் தேடி தேடி கொன்றது.

நன்றி சங்கர நாராயணன்

Leave a Reply