மோடி என்ற ஆளுமை இந்தியாவை மட்டுமல்ல, உலகளவில் புகழ்பெற்றுள்ளது என்று பாஜகவினர் சொல்லும் போதெல்லாம் நம்பாதவர்களும் இப்போது நம்பித்தான் ஆகவேண்டும் இந்த போட்டியின் முடிவைப் பற்றி அறிந்ததும்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டுவரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகை 2019-ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நபர் யார்? என வாசகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்காக உலகின் 25 நாட்டைசேர்ந்த தலைவர்களின் பெயர்கள் இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன

இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டிக்கு தேர்வானார்கள். இதற்கான ஓட்டெடுப்பு 15-ந்தேதி நள்ளிரவில் நிறைவடைந்தது

நிறைவாக 30.9 சதவீத ஓட்டுகளைபெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வுசெய்யப்பட்டார். 29.9 சதவீத ஓட்டுகளை பெற்று விளாடிமிர் புதின் 2-வது இடத்தையும், 21.9 சதவீத ஓட்டுகளைபெற்று டிரம்ப் 3-வது இடத்தையும், 18.1 சதவீத ஓட்டுகளை பெற்ற ஜின்பிங் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

இதையடுத்து பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகையின் ஜூலை 15-ந்தேதி இதழ் அட்டைப்பக்கத்தில் மோடியின் படம் இடம்பெற உள்ளது.

உலக நாடுகளுடனான நல்லுறவு, நமோ உள்ளிட்ட பலநலத்திட்டங்கள் உள்ளிட்டவை, பிரதமர் மோடியை, உலக தலைவர்களுக்கு இணையாக உயர்த்தி யுள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.