மத்தியப்பிரதேச மாநிலம், சாத்னா மாவட்டத்தில் உள்ள முகுந்த் பூரில், உலகின் முதல் வெள்ளைப்புலிகள் சரணாலயத்தை பொது மக்கள் பார்வையிடுவதற்காக, முதல்வர் சிவராஜசிங் செளஹான் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

சுமார் 50 கோடி பொருள்செலவிலும், 25 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் தொடக்கவிழாவில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய எஃகு மற்றும் சுரங்க துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், முதல்வர் சிவராஜ்சிங் செளஹான், மாநில மின்துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா ஆகியோர் கலந்துகொண்டு, சரணாலயத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தனர். இந்தவிழாவில், சுமார் ஒருலட்சம் பேர் கலந்து கொண்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் விந்திய பகுதியில்தான், கடந்த 1915ம் ஆண்டுமுதல் வெள்ளைப் புலி கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, அந்தசரணாலயத்தில் ரகு என்ற ஆண் வெள்ளை புலியும், விந்தியா, ராதா என்ற இரண்டு வெள்ளைப் புலிகளும் உள்ளன. மேலும், இரண்டு ராயல் வங்காளப் புலிகளும் இங்கு உள்ளன. இன்னும் சில மாதங்களுக்குள், வெள்ளைப் புலிகளின் எண்ணிக்கை 9-ஆக உயர்த்தப்படும் என்று மாநில அமைச்சர் சுக்லா தெரிவித்தார்.

Leave a Reply