உலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வாக அமையும் இந்தியாவில் பலவிழாக்கள் இருந்தாலும் மகா சிவராத்திரி மட்டுமே மிகப்பெரிய விழா. தேவர்கள் பலர் இருந்தாலும் மகா தேவர் என்பவர் ஒருவரே. அதைப்போலவே, மந்திரங்கள் பல இருந்தாலும் மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் என்பது ஒன்றேதான் உள்ளது.


சிவனைக் குறிப்பதான மகாசிவராத்திரி, இருளையும் அநீதியையும் போக்கக்கூடியது. இந்நாளில் இரவு முழுவதும் சிவனைக் கொண்டாடும் போது அநீதிகளை எதிர்த்துப் போராடக்கூடிய வல்லமை நமக்கு கிடைக்கிறது.
காசியில் இருந்து கோவைவரை எங்கும் சிவன் நிறைந்துள்ளார். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே மகா சிவ ராத்திரியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தமாபெரும் கடலில் ஒருதுளியாக நாம் இருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற பக்தர்கள் வாழ்ந்து மறைந் துள்ளனர். ஆனால், பரம்பொருள் எப்போதும் போலவே இப்போதும் மாறாமல் உள்ளது.


இயற்கையையும், சுற்றுச் சூழலையும் காப்பதே சிவனுடைய பாரம்பரியமாகும். பறவையும், மரங்களையும், விலங்குகளையும் இறைவனாக வணங்கும்முறையை நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். "ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி' (உண்மை ஒன்றுதான், அதை அறிஞர்கள் பலபெயர்களில் அழைக்கிறார்கள்) என்று நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.


உலகம் முழுவதிலும் பலநாடுகளில், பல மொழிகளைப் பேசக்கூடிய ஞானிகள் பிறந்துள்ளனர். அவர்கள் இடத்தாலும், மொழியாலும் வேறு பட்டிருந்தாலும் அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றுதான். அவர்கள் அனைவரும் கற்பிப்பது மனிதத்தை மட்டுமே.


யோகக்கலை என்பது உலகத்துக்கு நாம் கொடுத்த நன்கொடையாகும். யோகா பல பரிணா மங்களைக் கடந்து வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு யோகப்பயிற்சி முக்கியமானது. உடலை வளைத்து அசைத்து செய்வது மட்டுமே யோகா அல்ல. இதுவெறும் உடற் பயிற்சி மட்டுமல்ல. அதையும் தாண்டிய அற்புதக்கலைதான் யோகா.
மனதின் ஆலயம் உடல் என்றால், அந்த ஆலயத்தை அழகுறச்செய்வது யோகாதான்.


அதனால்தான், உடல் ஆரோக்கியத்துக்கு கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) யோகா என்று நான் கூறுகிறேன்.
இன்று உலகமக்கள் அனைவரும் அமைதியை விரும்புகின்றனர். போர்கள், பிரச்னைகளில் இருந்து மட்டுமின்றி மன அழுத்தத்தி லிருந்தும் அமைதி பெறுவதற்கு மக்களுக்கு யோகப்பயிற்சி உதவுகிறது. யோகா என்பது புது யுகத்தை உருவாக்கி, மக்களிடையே சகோதரத்து வத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக் கூடியது. இதைக் கருத்தில்கொண்டே ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச யோகா தினத்தை உருவாக்கியது.


நமது கலாசாரம் பெண்களை மையப்படுத்தி உருவானது. பெண்களை கடவுளின் அம்சங்களாக உருவாக்கி அவர்களை நாம் வணங்கி வருகிறோம். நமது பாரம்பரியத்தில் பலபெண்கள் சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளனர். மனிதகுலத்தின் முன்னேற்றம் என்பது பெண்கள் முன்னேறாமல் முழுமை அடையாது. ஆனால், பெண்கள் முன்னேற்றம் என்பதல்ல, பெண்களின் தலைமையில் மனிதகுல முன்னேற்றம் என்பதே சரியாக இருக்கும்.


இந்தியாவில் பெண்கள் கடவுளின் மறு உருவம் என்றே கூறுகிறோம். ஆனால், ஆண்கள் நல்லசெயல்கள் செய்தால் மட்டுமே, தெய்வீக நிலையை அடைய முடியும் என்று கூறுகிறோம்.நமது மனது எப்போதும் புதிய எண்ணங்களை வரவேற்பதாக இருக்கவேண்டும். ஆனால், எதிர்பாராத விதமாக நம்மில் சிலர், பழைமையானது என்பதற்காகவே நமது கொள்கைகளை மறுத்துவருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
சத்குரு ஜக்கி வாசுதேவ் பலசாதாரண மனிதர்களையும் யோகிகளாக மாற்றியுள்ளார். கூலிவேலைக்குச் செல்பவர்கள் கூட தங்களது அன்றாட வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுவதற்கு சத்குரு ஒருகாரணமாக அமைந்துள்ளார்.


கோவை ஈஷாயோக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், 112 அடி உயர ஆதியோகி – சிவன் திருமுகத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Leave a Reply