உலகசுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்தியசுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தன் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ..நா.வின் உலகசுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலகசுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன்தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவிகாலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வுசெய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி ஹர்சவர்தன் தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ளார் என்றும், வரும் 22-ம் தேதி பதவியேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு முழுநேரபணி அல்ல, நிர்வாக சபையின் கூட்டங்களுக்கு மந்திரி தேவைப்படுவார் என்று ஒருஅதிகாரி கூறினார்.

73 வது உலகசுகாதார மாநாட்டில் உரையாற்றிய ஹர்சவர்தன் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சரியானநேரத்தில் இந்தியா மேற்கொண்டதாக கூறினார்.

கொரோனா வைரசை கையாள்வதில் இந்தியா சிறப்பாக செயல் பட்டுள்ளது என்றும், வரும் மாதங்களில் சிறப்பாகச்செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.